தெ.ஆ. ஏ அணியுடன் 2 டெஸ்ட்: ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிப்பு; துணை கேப்டன் சாய் சுதர்சன்
பெங்களூரு: தென் ஆப்ரிக்கா ஏ கிரிக்கெட் அணியுடனான 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்கா ஏ கிரிக்கெட் அணி, இந்தியா ஏ அணியுடன் இரு 4 நாள் போட்டிகள் தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி அக்.30ம் தேதியும், 2வது போட்டி நவ. 6ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இரு போட்டிகளில் ஆடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் (28) நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், இந்தாண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் ஆடியபோது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதன் பின் நடந்த போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட முடியாமல் போனது.
பல மாதங்களுக்கு பின் இந்திய அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இந்தியா ஏ அணியின் துணை கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள், கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், முகம்மது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர், இந்தியா ஏ அணி ஆடும் 2வது போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா, காயத்தில் இருந்து குணமாகி, இந்தியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் ஆடுவார் எனத் தெரிகிறது.
இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
முதல் டெஸ்ட்: ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்குர், ஆயுஷ் படோனி, சரன்ஷ் ஜெயின். 2வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அஹமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகம்மது சிராஜ், ஆகாஷ் தீப்.