தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3வது டி20யில் பாக். வெற்றி

டாகா: வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு டாகாவில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டங்களில் வங்கம் முறையே 7 விக்கெட், 8 ரன் வித்தியாசங்களில் வெற்ற பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஆட்டம் அதே டாகாவில் நடந்தது. முதலில் விளையாடிய பாக் 20 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்கம் 16.4 ஓவரில் 104 ரன்னுக்கு சுருண்டது. அதனால் பாக் 74 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை சுவைத்தது.
Advertisement

அகனே யமகுச்சியிடம் பணிந்த உன்னதி

சாங்சோ: சீனாவின் சாங்சோ நகரில் சீன ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 2வது சுற்றில் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்துவை வீழ்த்தினார். அதே உற்சாகத்துடன் நேற்று காலிறுதியில் மற்றொரு முன்னணி வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர் கொண்டார். அதில் அதிரடியாக விளையாடிய யாமகுச்சி 21-16, 21-12 என நேர் செட்களில் உன்னதியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 33நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து; அபார கோலடித்த கிஷி அர்ஜென்டினா வெற்றி

குய்டோ: ஈகுவடாரில் நடந்து வரும் கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டியில் நேற்று, ஈகுவடார் அணியை, அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில், போட்டியை நடத்தும் ஈகுவடார் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதின. துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய அர்ஜென்டினா வீராங்கனைகள் கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீராங்கனை கிஷி டெனிஸ் நுனெஸ் அபாரமாக பந்தை கடத்தி சென்று நேர்த்தியாக கோலடித்து அசத்தினார். அதன் பின், ஆட்டத்தின் 2ம் பாதியில், 70வது நிமிடத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த புளோரன்ஸ் போன்ஸெகுண்டோ மேலும் ஒரு கோலடித்தார். ஈகுவடார் அணி வீராங்கனைகள் பல முறை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் உருகுவே - சிலி அணிகள் மோதின. போட்டி துவங்கி, 40வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்டுத்தி, உருகுவே வீராங்கனை பமேலா கோன்ஸலாஸ் கோல் அடித்தார். பின், அதே அணியை சேர்ந்த வெண்டி கார்பெலோ, 65 மற்றும் 73வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோலடித்து அசத்தினார். சிலி வீராங்கனைகளால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. எனவே, 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அபார வெற்றி பெற்றது.

Advertisement