தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3வது டி20யில் சாம்சனுக்கு வாய்ப்பளிக்கலாம்: மாஜி வீரர் பொல்லாக் யோசனை

மும்பை: இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க யோசிக்கலாம் என்று முன்னாள் வீரர் பொல்லாக் தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடந்த 2வது டி20 போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. இந்தியாவின் டாப் ஆர்டரில் சுப்மன் கில்லின் மோசமான டி20 ஃபார்ம் தொடர்கிறது. முதல் போட்டியில் 4 ரன்கள் எடுத்தவர், 2வது போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆனார். ஆசிய கோப்பை தொடங்கியதிலிருந்து, சாம்சனுக்குப் பதிலாக கில்லே தொடக்க வீரராக களமிறங்குகிறார். கேப்டன் சூர்யகுமார் கீழ்வரிசையில் ஆடிய சாம்சனின் இடத்தை, கடைசி 5 போட்டிகளில் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக மாறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் பொல்லாக் கூறியதாவது:- அணி மாற்றம் தற்போது ஒரு பெரிய விவாதமாகி விடும் என்பதால், இப்போது அவர்கள் (இந்தியா) இதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் அடுத்தடுத்து டி20 போட்டியில் சாம்சனை கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம். ஆனால் போட்டியில் வென்றபோது மாற்றாத அணி, தோற்றபோதும் மாற்றம் செய்ய கூடாது. இன்னும் ஒரு போட்டிக்கு பிறகு மாற்றம் குறித்து சிந்திக்கலாம். ஒருவேளை அர்ஷ்தீப் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதால், ஹர்ஷித் அவருக்குப் பதிலாக இடம்பிடிக்கலாம். சூர்யாவின் ஃபார்முக்கு, சில சமயங்களில் ஒரு இடைவெளி தேவைப்படும். அல்லது அவர் பேட்டிங் வரிசையில் கீழ் இறங்கி சிறிது காலம் வேறு ஒரு பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News