டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படைகளுக்கும், ட்ரூஸ் குழுக்களுக்கும் இடையே போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளது. ட்ரூஸ் சிறுபான்மையினரை இஸ்ரேல் கூட்டாளியாக கருதுகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் சிரியாவின் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து. டமாஸ்கஸில் உள்ள சிரியாவின்பாதுகாப்பு அமைச்சகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் எல்லையில் படைகளை பலப்படுத்தி உள்ளது.