தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழம்பெரும் இனிப்புக் கடையில் ராகுல் காந்தி ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க... ஸ்வீட் ஆர்டர் எடுக்கணும்’: கடை உரிமையாளரின் கோரிக்கையால் கலகலப்பு

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல் காந்தியிடம், அவரது திருமணம் குறித்து கடை உரிமையாளர் பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஐந்து நாள் திருவிழாவின் முக்கிய தினமான நேற்று, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியின் புகழ்பெற்ற மற்றும் நூற்றாண்டுகள் பழைமையான ‘கண்டேவாலா’ இனிப்புக் கடைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

Advertisement

அங்கு சென்ற அவர், இனிப்புகள் வாங்குவதோடு மட்டுமல்லாமல், இமார்தி மற்றும் பேரீச்சம்பழ லட்டுகளைத் தயாரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘இந்தக் கடையின் இனிமை இன்றும் தூய்மையாகவும், பாரம்பரியமாகவும், மனதைத் தொடுவதாகவும் இருக்கிறது. தீபாவளியின் இனிப்பு தட்டுகளில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் தான் இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகை குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ராகுல் காந்தி தனது வீடு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வாங்க வந்திருந்தார். அப்போது அவரிடம், ‘சார், இது உங்கள் சொந்தக் கடை’ என்றேன். அவரது தந்தை மறைந்த ராஜீவ் காந்திக்கு இமார்தி இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால், அதைச் செய்து பார்க்குமாறு கூறினேன். அவரும் அதைச் செய்தார். அவருக்கு பேரீச்சம்பழ லட்டு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையும் செய்தார்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியாவின் ‘பிரம்மச்சாரி’ அவர்தான் என்பதை எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் நான், ‘ராகுல் ஜி, தயவுசெய்து சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் திருமணத்திற்கான இனிப்பு ஆர்டரை பெறுவதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்று கூறினேன்’ எனத் தெரிவித்தார். ராகுல் காந்தியிடம் கடை உரிமையாளர் விடுத்த இந்த கலகலப்பான கோரிக்கை, அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

Related News