சுசூகி பிரான்க்ஸ் கார்
ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், பிரான்க்ஸ் பிளக்ஸ் பியூயல் கான்சப்ட் காரை சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்க் கூடியது. இந்தியச் சந்தையில் உள்ள பிரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் இன்ஜின் கே சீரிஸ் டூயல் ஜெட் இன்ஜின் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும். ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரான்க்ஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
அடாஸ் சூட் இடம் பெற்றுள்ளது. அடாஸ் பிளக்ஸ் பியூல் பேட்ச் மற்றும் கிராபிக்ஸ் இடம், கருப்பு நிற அலாய் வீல்கள் உள்ளன. இந்தியச் சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய காரை சுசூகி நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.