சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி
Advertisement
சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சுந்தசேரனுக்கு, நேற்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். அதேநேரம் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்தது குறித்து டிஎஸ்பி சுந்தரேசனிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், டிஎஸ்பி சுந்தரேசன் திடீரென நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
Advertisement