உடற்தகுதி டெஸ்டில் சூர்யகுமார் பாஸ்
பெங்களூரு: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழும் சூர்யகுமார் யாதவ், கடந்த ஐபிஎல் தொடரின்போது, 16 போட்டிகள் ஆடி 717 ரன்கள் குவித்தார். போட்டிகளின் கடைசி கட்டத்தில் சூர்யகுமாருக்கு இரு கால் தொடைகள் இணையும் பகுதியில் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்ற காயம் ஏற்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் பங்கேற்பதற்கான தகுதி சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் அவர் முழு உடற் தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.