தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழை காரணமாக நெற்பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி தீவிரம்

*12ந்தேதிக்குள் முடிக்க திட்டம்

Advertisement

திருத்துறைப்பூண்டி : பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் விடுபடாத அளவிற்கு கணக்கெடுப்பு பணி நடத்தி, 12ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதபாக, வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.டிட்வா புயல் எதிரொலி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையினால், விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அழுகி சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வேளாண்மை துணை இயக்குனர் நெல் மற்றும் சிறுதானியங்கள் கண்காணிப்பு அலுவலர் அறவாழி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை நேரடியாக பார்வையிட்டு, சேத விபர கணக்கெடுக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதல்வருடைய ஆணைக்கிணங்க வேளாண்மை துறை உழவர் நலத்துறை அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு நடத்தும் பணியினை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். 12ந்தேதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடித்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்த பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. ஒருசில பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமல் நின்று வருகிறது. தண்ணீர் வடிந்த பிறகு அப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே இங்கு 59 வேளாண்மை உதவி அலுவலர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் வருவாய்த்துறை விஏஓ இணைந்து பணியாற்றி வருகிறார்கள். சாகுபடி 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு இருப்பதனால், புதுக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் இருந்து உதவி வேளாண் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்.

இன்று அல்லது நாளை கணக்கெடுப்பு பணி விரைவில் முடிக்கப்படும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க எல்லா நடவடிக்கைகளும் வேளாண் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட எந்த பகுதியும் விடுபடாத அளவிற்கு, கணக்கெடுப்பு பணி நடைபெற்று, அதற்கான நிவாரணம் வழங்கப்படும். டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு குறித்து, அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்று அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், வேளாண்மை துணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்மற்றும் வேளாண்ம உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement