தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு பணிகள்

*விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்
Advertisement

கும்பகோணம் : தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் மாறன் தலைமை வகித்தார்.

சங்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை விளக்கி செயலாளர் கிரி பேசினார். அப்போது, தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மகாமக திருவிழாவிற்கு முன் தஞ்சாவூர்-மயிலாடுதுறை இடையேயான இரட்டை வழி ரயில் பாதை பணிகளை நிறைவு செய்ய வேண்டும், தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக புதுடெல்லிக்கு செங்கோல் விரைவு ரயில் இயக்கவும், திருச்சி-தாம்பரம் இடையே இயக்கப்படும் இன்டெர்சிட்டி ரயிலை தடையின்றி தொடர்ந்து நிரந்தரமாக இயக்க கோரியும் சம்பந்தப்பட்ட துறையினரை கேட்டுக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் இணைச்செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் நடராஜகுமார், தீபக்வசந்த், ரேவந்த்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement