சுர்ஜித்தை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
நெல்லை: நெல்லை கேடிசி நகர் பகுதியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்களத்தை சேர்ந்த it ஊழியர் கவின் என்பவர் சுர்ஜித் என்ற வாலிபரால் வெட்டி படுகொலை செய்யபட்டார்.
இந்த கொலையானது முற்றிலும் சுர்ஜித்யின் தங்கையை வந்து கவின் காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இது ஆணவ கொலையாக பார்க்கப்படுகிறது தொடர்ந்து இந்த வழக்கில் சுர்ஜித்யின் தந்தை மற்றும் அவரது தாயை கைதுசெய்யக்கோரி கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் அடிப்படையில் சுர்ஜித்யின் தந்தை மற்றும் சுர்ஜித் இருவரும் கைதுசெய்பட்டு பாளயங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த வழக்கு ஆனது தமிழக அரசு சார்பில் cbcid-யிடம் ஒப்படைக்கப்பட்டது. cbcid தொடர்ந்து தீவிர விசாரணை ஈடுபட்டு வந்த நிலையில் 2 பேரையும் காவலில் எடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது காலையில் இதற்காக சரவணன் மற்றும் அவரது மகன் சுர்ஜித் இரண்டுபேரும் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துவந்தனர். காலையில் இந்த வழக்கை 38 வது வழக்காக விசாரணை செய்வதற்காக நீதிபதி ஹேமா அளித்திருந்தார் தொடர்ந்து சில பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுவந்தது நீதிபதி ஹேமா குற்றவாளியாக கருத பட கூடிய சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனின் இடம் தொடர் விசாரணை ஈடுபட்டது.
இந்த விசாரணையில் உடம்பில் எதாவது காயங்கள் இருக்கிறதா தொடர்ந்து இந்த விசாரணையில் செல்ல விருப்பம் இருக்கிறதா என்று கேல்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இருவருமே எங்களுக்கு விசாரணைக்கு செல்ல விருப்பம் இல்லை என மறுப்பு தெரிவித்தனர் தொடர்ந்து இந்த விசாரணை நேரம் குறிப்பிடாமல் சற்று நேரம் ஒத்துவைக்கப்பட்டது.
தற்போது இந்த மனுவானது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது 5 நாட்கள் cbcid சார்பில் விசாரணைக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது அதன் அடிப்படையில் நீதிபதி ஹேமா தற்போது 2 நாட்கள் சுர்ஜித் மற்றும் சரவணனை நீதிமன்ற காவலில் கஸ்டடி எடுப்பதற்கு அனுமதிவழங்கி உள்ளார்.
இன்னும் சிறிதுநேரத்தில் இந்த இருவரையும் cbcid காவல்துறையினர் ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று தங்களது விசாரணையை தொடங்குவர் இந்த விசாரணை முடிவுஅடைந்த நிலையில் பல தீவர தகவல்கள் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.