சுர்ஜித்துடன் செல்போனில் பேசியவர்களுக்கு சிபிசிஐடி சம்மன்
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான எஸ்ஐ சரவணனை மாநகர போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சுர்ஜித்திற்கு உதவியதாக அவரது பெரியம்மா மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.
Advertisement
இந்நிலையில் கவினை கொலை செய்த நாளன்று சுர்ஜித் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை சிபிசிஐடி போலீசார் கண்காணித்தனர். இதில் சுர்ஜித்தின் 2 உறவினர் மற்றும் நண்பர் என 3 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளனர்.
Advertisement