லண்டன்: ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற சீன டென்னிஸ் வீராங்கனை ஸெங் க்வின்வென் (22). சமீபத்தில் நடந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கேதரீனா சினியகோவாவிடம் தோல்வியை தழுவி வெளியேறினார். நீண்ட காலமாக வலது முழங்கையில் வலியால் அவதிப்பட்டு வந்த ஸெங்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.