புதுடெல்லி: கடந்த 2011-2015 வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தீர்ப்பளித்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பக்கம் 45 மற்றும் 46 ஆகியவற்றில் தனக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்கள் விசாரணை நீதிமன்றத்தின் நடைமுறைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், அவற்றை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அரசியல் சாசன பிரிவு 21 கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.