உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக புதிய வழக்கு: தமிழ்நாடு அரசு தாக்கல்
புதுடெல்லி: விளையாட்டு பல்கலைக்கழக குழுவில் நிதித்துறை செயலாளர் நியமிப்பது மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் மாற்றுதிறனாளிகள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்யும் வகையில் , தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சட்ட திருத்த மசோதா 2025 கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி நிறைவேற்றி இருந்தது. பிறகு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கோரி கோப்புகளை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அரசு அனுப்பி வைத்திருந்தது ஆனால் இந்த மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநர் முடிவெடுத்த நிலையில் இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக ஆளுநரின் இந்த முடிவு அரசியல் சாசனத்தின் பிரிவு 200 மீறும் வகையில் இருக்கிறது என்றும் எனவே ஆளுநரின் நடவடிக்கைகளை சட்டவிரோதம் என அறிவிப்பதுடன் தன்னிச்சையானது எனவும் அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது மேலும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களை தமிழக ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறது எனவும் தமிழக அரசு மனுவில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.