உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்
புதுடெல்லி: மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபூல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பஞ்சோலியின் நியமனத்துக்கு கொலிஜியம் உறுப்பினரான நீதிபதிகள் நாகரத்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நீதிபதிகளும் பதவியேற்ற பின்னர் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளை கொண்டு முழு பலத்துடன் உச்சநீதிமன்றம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement