உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரை
புதுடெல்லி: மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் இவர்களது பெயர்களை நேற்று பிற்பகல் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஒன்றிய அரசு அங்கீகரித்தால் வரும் 2031 அக்டோபர் மாதம் ஜோய்மல்யா பாக்சி ஓய்வு பெற்ற பிறகு, நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி தலைமை நீதிபதியாக பதவியேற்க வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement