வாக்கு திருட்டு குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் 13ம் தேதி விசாரணை
Advertisement
புதுடெல்லி: வாக்கு திருட்டு மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ரோகித் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘வாக்குத்திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை வரும் 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டள்ள சூழலில் வாக்கு திருட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement