பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனத்தை வைக்கும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் : சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
11:38 AM Nov 26, 2024 IST
Share
Advertisement
டெல்லி : பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனத்தை வைக்கும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தன் மீதான அவதூறு வழக்குகளுக்கு தடைவிதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணையின் போது, முதல்வர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால் வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.