கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
டெல்லி : தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும், "சென்னை உயர்நீதிமன்றம் முறையாக ஆராய்ந்து உத்தரவை பிறப்பித்துள்ளது, சரியான முறையில் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்று நீதிபதி ஜேகே மகேஸ்வரி தெரிவித்தார்.