தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பதை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்க உச்சநீதிமன்றம் முடிவு
டெல்லி : தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பதை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.
Advertisement
Advertisement