உலக நாடுகளுக்கு வரி விதிக்கும் டிரம்ப் அதிகாரத்தை பறிக்குமா உச்ச நீதிமன்றம்..? நவ.5ம் தேதி விசாரணை தொடக்கம்
சிட்னி: அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு எதிராக வரியை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இது சட்டவிரோதமானதாக அறிவிக்கக் கோரியும், அதிபர் டிரம்பின் வரிவிதிப்புகளின் சட்டப்பூர்வ தன்மையை ஆராயவும் வலியுறுத்தி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
Advertisement
ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் அமெரிக்க மாவட்ட மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, அதிபர் டிரம்பின் வரி விதிப்புகள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. தற்போது இறுதிகட்டமாக உச்ச நீதிமன்றத்தில் அதிபர் டிரம்பின் அதிகாரம் செல்லுபடியாகுமா என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 5ம் தேதி தொடங்க இருக்கிறது.
Advertisement