தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வுமுகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேட்டால் எவ்வளவு மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள் என்பதை கண்டறியும் வகையில் தேர்வு மையம் வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது.
Advertisement

கடந்த மே மாதம் 5-ம் தேதி இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. மேலும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது. இதனை அடுத்து வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்துள்ளதாகவும், அதனால் நீட் மறுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீர் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வுமுகமை வெளியிட்டுள்ளது.

Advertisement