உச்சநீதிமன்றத்தில் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் படித்தவர்களுக்கு வேலை
பணி: கோர்ட் மாஸ்டர். மொத்த இடங்கள்: 30.
சம்பளம்: ரூ.67,700.
வயது: 01.07.2025 தேதியின்படி 30 முதல் 45க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து நிமிடத்திற்கு 40 ஆங்கில வார்த்தைகள் என்ற வேகத்தில் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, டைப்பிங் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங் அப்டிடியூட் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.750/-. இதை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sci.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2025.