ஒன்றிய அரசின் செயல்பாடு என்பது நீதிமன்றத்திற்கு இழைக்கும் அநீதி : உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி : 2021ல் கொண்டுவரப்பட்ட தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைக்க, ஒன்றிய அரசு கோரிக்கை வைத்ததற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி பேசுகையில், "“நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் சில வழக்குகளை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நினைக்கிறதா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறிவிடுங்கள்.ஒன்றிய அரசின் செயல்பாடு என்பது நீதிமன்றத்திற்கு இழைக்கும் அநீதி”, இவ்வாறு தெரிவித்தார். தீர்ப்பாய சீர்திருத்த வழக்கை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
Advertisement
Advertisement