தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது ஆப்கான்: நியூசி. வெளியேற்றம்

Advertisement

நார்த் சவுண்ட்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பப்புவா நியூ கினியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. டரூபாவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த நியூ கினியா 19.5 ஓவரில் 95 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன் (32 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார். இதற்கு அடுத்த பெரிய ஸ்கோர் உதிரிகளாகக் கிடைத்த 25 ரன் தான். நவோ 13, டோனி உரா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். நியூ கினியா வீரர்கள் 3 பேர் டக் அவுட்டானதுடன், 4 பேர் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் பந்துவீச்சில் ஃபசல்லாக் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். நவீன் உல் ஹக் 2, நூர் அகமது 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து வென்றது. குர்பாஸ் 11, இப்ராகிம் ஸத்ரன் (0), ஒமர்சாய் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். குல்பாதீன் நயீப் 49 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது நபி 16 ரன்னுடன் (23 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூ கினியா தரப்பில் அலி நவோ, செமோ கமியா, நோர்மன் வனுவா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஆப்கான் சி பிரிவில் முதல் இடத்துக்கு முன்னேறியதுடன் சூப்பர்-8 சுற்றுக்கும் முன்னேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் சூப்பர்-8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதில் வெல்லும் அணி சி பிரிவில் முதலிடம் பெறும். இன்னும் 2 ஆட்டங்களில் ஆட வேண்டியிருந்தாலும், நியூசிலாந்து அணியால் அதிகபட்சமாக 4 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால் சூப்பர்-8 வாய்ப்பை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறுகிறது. உகாண்டா, நியூ கினியா அணிகளும் வாய்ப்பை இழந்துவிட்டன.

Advertisement