ஞாயிறு அட்டவணைப்படி நாளை சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்!!
10:38 AM Aug 14, 2025 IST
சென்னை: விடுமுறை தினத்தை ஒட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். நாளை காலை 5 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 வரை 10 நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.