தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்டைலான சன் கிளாஸ்... தேர்வு செய்வது எப்படி?

சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை அத்தனைப் பேரின் ஸ்டைல்களையும் பிரபலமாக்கியதில் முக்கியப் பங்கு கூலிங் க்ளாஸ் எனப்படும் சன் க்ளாஸ்களுக்கு உண்டு. அந்த அளவிற்கு நம் ஃபேஷன் சார்ட்டில் இருந்து பிரிக்கவே முடியாதவைகள் இந்த கூலர்கள். ஒரு சிலரைக் கூலருடன் பார்த்துவிட்டு கூலர் இல்லாமல் பார்த்தால் வேறு யாரோ போல் இருப்பார்கள். இப்படி நம் முகத்தோற்றத்தையே மாற்றக் கூடிய திறமை உள்ள கூலர்களை நம் முகவடிவத்திற்கு ஏற்ப தேர்வு செய்கிறோமா? மேலும் தரமான கூலர்களை வாங்குகிறோமா? என்று கேட்டால் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

Advertisement

“ விலை , பிராண்ட், மட்டுமே அதிகம் பார்க்கிறோமே தவிர முக வடிவத்திற்கு ஏற்ப பிரேம்கள் தேர்வு லென்ஸ்களில் கவனம் இதெல்லாம் பார்ப்பதில்லை என்கிறார் Dr.சரஸ்வதி(Senior Retina Consultant)சாதாரணமாவே 400 - 500 நானோ மீட்டர் அளவுள்ள வெளிச்சம்தான் நம்ம கண்களுக்குத் தெரியும். அதுக்குக் கீழ உள்ள லைட்டைதான் நாம புற ஊதாக் கதிர்கள்னு(UV-light) சொல்றோம். அதே மாதிரி அந்த 400-500 நா.மீ க்கு மேல உள்ள கதிர்களை இன்ஃப்ராரெட் லைட்னு சொல்வோம். இது ரெண்டும் சூரிய ஒளி கூறுகள் சம்பந்தப்பட்டதுதான். இயற்கையாவே நம்ம கண்களுடைய கார்னியா என்கிற கருவிழியில் இருக்கும் லென்ஸுக்கு இந்த வெளிச்சத்தைத் தடுக்கும் திறன் உண்டு. இது அளவுக்கு அதிகமா UV வெளிச்சத்தை சந்திக்காம இருக்கத்தான் நாம சரியான கூலர்களைப் பயன்படுத்தணும். இல்லைன்னா கேட்ராக்ட் சின்ன வயதுலயே வந்துடும். வெயில் நேரத்துல நான் வெளிய போறதில்லைன்னு சொல்லிக்கலாம். ஆனால் இந்த 400 - 500 நா.மீ வெளிச்சத்துலயே கூட நம்ம கண்களுக்கு ஆபத்தான பிரச்னைகள் இருக்கும்.

அதாவது மொபைல், கம்ப்யூட்டர், எல்.இ.டி டிவி மானிட்டர், ஏன் சவுண்ட் சிஸ்டம்ல இருக்கக் கூடிய ப்ளூ லைட் இதெல்லாம் கண்களுக்கு ஆபத்தான லைட் தான். இந்த எலெக்ட்ரானிக் திரைகள் அதிக நேரம் வெறும் கண்களைக் கொண்டு பார்த்துக்கிட்டே இருந்தாலும் கூட கண்களுடைய ரெட்டினா அதாவது விழித்திரை பாதிப்படைஞ்சு 30, 40 வயதுல கண் பார்வைக் கோளாறு ஏற்படலாம். மேலும் அதிகமா இமைக்கக் கூடிய பிரச்னையும் உருவாகும். கருவளையம், மங்குதல், கண்களுக்கு அடியில் பை, சுருக்கங்கள், நெற்றிச் சுருக்கம் இப்படி பல பிரச்னைகள் உருவாகும். இதெல்லாம் வெளிய இருக்கிற பிரச்னைகள். இது இல்லாம கண்களுடைய விழித்திரை பாதிப்புக்குள்ளாகலாம். அதுக்காக தான் நாங்க Anti-reflective கோட்டட் கூலர்களை பயன் படுத்தணும்னு ஆலோசனைக் கொடுக்கறோம். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எலெக்ட்ரானிக் திரைகளைப் பார்க்குறதை விடுத்து பச்சைச் செடிகளை பார்க்கலாம். அதே போல் ரொம்ப குறைவான செலவுல ரோட்டோரக் கூலர்களை வாங்கிப் போட்டுக்குறதுக்கு போடாமலே இருக்கறது நல்லது. அதே மாதிரி உங்க புருவம் முதல் மேல் கன்னம் வரைக்கும் உங்க கூலர் கண்கள், கண்கள் சுற்றி மறைக்கணும். பெரும்பாலும் மருத்துவர் ஆலோசனைகள் கேட்டு உங்கள் கண்களுக்கு ஏத்த கூலர்கள் பயன்படுத்துறதுதான் ரொம்ப நல்லது. மேலும் முக வடிவத்துக்கு ஏத்த ஃப்பிரேம்கள் தேர்வு அதி முக்கியம். அதே போல் மூக்குதான் நம்ம கண்ணாடியப் பிடிச்சு நிக்கும். நம்ம மூக்கை உறுத்தாத ஃபிரேம் தேர்வுகளும் முக்கியம். இல்லைன்னா சிலருக்குக் காயமோ அல்லது தழும்போ கூட ஏற்படலாம். எந்த முகத்துக்கு என்ன கூலர் அடிப்படையில் நான்கு விதமான முகத் தோற்றங்கள் வட்டம், சதுரம், இதயம், மற்றும் நீண்ட வட்டம் அதற்கேற்ப ஃபிரேம்கள் தேர்வு அவசியம். ஃபிரேம்கள் மற்றும் லென்ஸ்களின் வடிவங்கள் மற்றும் ஆங்கிள்களின் அடிப்படையில் முக வடிவங்களுடன் சரியாக மேட்ச் செய்துகொள்ளலாம்.

ஜிப்ஸி ஸ்டைல்(Wayfarer): சரிவக வடிவமாக(trapezium) கொஞ்சம் பெரிய ஃபிரேம்களுடன் இருக்கும் கண்ணாடிகள். (இதயம், வட்டம், நீள்வட்ட முகங்களுக்கு ஏற்றது)

வட்ட ஸ்டைல்(Round): மகாத்மா காந்தி ஸ்டைல் கண்ணாடிகள். உங்களுடைய முகத் தேர்வுக்கு ஏற்ப ஃபிரேம்களை சரியாகப் போட்டுப் பார்த்து வாங்குவது நல்லது. கொஞ்சம் தப்பானாலும் வில்லன் , வில்லி லுக் கொடுத்துவிடும். (சதுர, நீண்ட சதுர முகங்களுக்கு ஏற்றது).

பூனைக் கண்/ பட்டாம் பூச்சி ஸ்டைல்(Cat Eye/ Butterfly): பெண்களுக்கான பிரத்யேக ஸ்டைல். பார்க்க மேல்நோக்கி இருக்கும் பூனைக்கண்கள் போல் அல்லது வண்ணத்துப்பூச்சியின் இறக்கை போல் ஃபிரேம்கள் இணையும். (இதய, வட்ட வடிவ முகங்களுக்கு ஏற்றது)

பைலட் ஸ்டைல்(Aviator): விமானம், ஏர்ஃப்போர்ஸ் பணியாளர்களின் சிறப்பு ஸ்டைல் கூலர்கள். இந்த பைலட் ஸ்டைல் எல்லா வகையான முக வடிவங்களுக்கும் பொருந்தும் ஸ்டைலிஷ் கூலர்கள்.

ஸ்போர்ட் ஸ்டைல்(Sport): நீச்சல், சைக்கிளிங், போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் ஸ்டைல் . குறிப்பாக கண் மற்றும் அதன் சுற்று வட்டத்தை முழுமையாக கவர் செய்யும் . பெரும்பாலும் இதய வடிவ முகத்திற்கு பொருந்தும் ஸ்டைல். ஆனால் விளையாட்டு எனில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

சதுர ஸ்டைல்(Square): சதுர வடிவ ஃபிரேம்கள், புருவங்களை கவர் செய்வது போல் இருக்கும் கூலர்கள். இவைதான் பெரும்பாலும் வெயிலுக்கு ஏற்றவைகளாக பயன்படுத்தப்படும். கண்கள் , மேல் கன்னம், புருவம் வரையிலும் கவர் செய்யும். (வட்ட, நீள் வட்ட முகங்களுக்கு ஏற்றது)

பெரிய கூலர்கள்(Over Sized): டூரிஸ்ட் ஸ்பெஷல். ஃபிரேம், லென்ஸ் என அனைத்தும் அகலமாக இருக்கும். முகத்தின் பாதி அளவிற்கு மறைத்து வெயிலிலிருந்து முழுமையான பாதுகாப்புக் கொடுக்கும். (நீள்வட்ட முகங்களுக்கு ஏற்றது)

கவசம் ஸ்டைல்(Shield): பெரிய கூலர்கள் போல் இந்த கவச ஸ்டைல்களும் வெயிலுக்கு ஏற்ற கூலர்கள். கண்களின் ஓரங்களையும் மறைப்பதால் சூரிய ஒளி பாதிப்பிலிருந்து கண்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். விண்வெளி வீரர்களின் ஸ்டைல் என்றும் சொல்லலாம். குடும்பத்திற்கு ஒரு கூலர் என்றில்லாமல் அவரவருக்கு ஏற்ற கூலர் தேர்வு செய்து வாங்குவது சிறப்பு.

- ஷாலினி நியூட்டன்

Advertisement

Related News