தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை: வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தகவல்

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

மார்ச் முதல் மே வரையிலான கோடை மழை 97% கூடுதலாக பெய்துள்ளது. 13 செ.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. 11 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் 13 செ.மீ. கோடை மழை பெய்துள்ளது; இயல்பைவிட இது 129% அதிகம். 8 நாட்களில் அவலாஞ்சியில் 141 செ.மீ., சின்னக்கல்லாறு 101 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் ஒரு நாள் கூட வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை. 3 மாதத்தில் வேலூர் மாவட்டத்தில் 16 நாட்கள் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கோடை காலத்தில் வேலூர், கரூர், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 106% அளவுக்கு அதிகமாகும். தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் 110%ஐவிட அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் பருவமழை சராசரியாக 33 செ.மீ. மழை; ஆனால் 36 செ.மீ.க்கு மேல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related News