தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் விவகாரம் போலி கொலையாளிகளை வைத்து வழக்கை முடிக்க திட்டமிட்டது அம்பலம்

*திடுக்கிடும் தகவல்

கோவை : தோட்டத்து கிணற்றில் எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட வழக்கில் போலி கொலையாளிகளை சரண்டர் செய்ய வைத்து கொலை வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கொலையான வாலிபர் சென்னையிலேயே கொலை செய்யப்பட்டு அங்கிருந்து கார் மூலம் கோவை கொண்டு வந்து தனது நண்பர்கள் வேலை செய்யும் தோட்டத்து கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் செட்டிபாளையம் போலீசில் சரணடைந்தனர்.

அப்போது பணியில் இருந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, இந்த வழக்கில் பாலமுருகன், முருகப்பெருமான் ஆகிய இருவரை மட்டும் கொலையாளிகளாக கருதி வழக்கை முடித்து வைக்கும் முடிவில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கு தொடர்பாக கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமனுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயனிடம் அனுமதி பெற்று தனிப்படை அமைத்து, கொலை வழக்கு விசாரணையை இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் நடத்தியுள்ளார்.

இந்த விசாரணையில், ஜெயராமன் சென்னையில் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரது நண்பர்கள் நியூட்டன், பெனிடோ ஆகியோர் கொலை செய்ததும், அங்கிருந்து தங்களது நண்பர்கள் 2 பேர் உதவியுடன் ஜெயராமன் சடலத்தை கார் மூலமாக கோவை கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் கிணற்றில் போட்டதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் பாலமுருகன், முருகப்பெருமான் ஆகிய இருவரும் கொலையாளிகளாக ஒப்புக்கொண்டு போலீசில் சரண்டரானதில் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதும் தெரியவந்தது. மேலும் சரணடைந்தவர்களை வைத்து கொலை வழக்கை முடிக்கவும் திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கினை சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சாிவர கையாளாமல் இருந்ததோடு அவரது செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்ததால் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.