சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை
சூலூர் : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சிவசாமி (40). இவர் சூலூரில் உள்ள தனியார் கோதுமை ரவை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்கு சடங்குகள் செய்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
வீட்டை பூட்டிச் சென்று இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார் .வீட்டிற்கு வந்த சிவகுமாருக்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக சிவகுமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது அவர் வீட்டிற்கு வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் தான் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.