தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாரிசு அரசியல் என்று வசைபாடுவது ஏன்? 1989க்கு பின்னர் பிரதமராக யாராவது இருந்தார்களா? காந்தி குடும்பம் மீதான மோடி தாக்குதலுக்கு கார்கே பதிலடி

ஜெய்ப்பூர்: காந்தி குடும்பம் வாரிசு அரசியல் என்று பேசும் மோடி, 1989க்கு பிறகு அந்த குடும்பத்தில் இருந்து யாராவது பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தார்களா என்று கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது: மோடி பொய்யர்களின் தலைவர். அவர் நாட்டைப்பற்றி சிந்திக்கவில்லை, காந்தி குடும்பத்தை மட்டுமே துஷ்பிரயோகம் செய்கிறார். எனக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது, நான் பயப்பட மாட்டேன் என்று மோடி கூறுகிறார். உங்களுக்கு பயமில்லை என்றால், ஏன் எங்கள் நிலத்தின் பெரும் பகுதியை சீனாவுக்கு தாரைவார்த்து விட்டுவிட்டீர்கள்.
Advertisement

அவர்கள் உள்ளே வருகிறார்கள், நீங்கள் தூங்குகிறீர்கள். நீங்கள் அப்போது தூக்க மாத்திரை போட்டு தூங்கி விட்டீர்களா?. மோடி எப்போதும் பொய்களை சொல்லி, மக்களை சித்திரவதை செய்து தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். 1989ல் இருந்து காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆகவில்லை. ஆனாலும் மோடி வாரிசு அரசியல் என்று வசைபாடுகிறார். பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். தேர்தலின் போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், ஆனால் கலவரங்களைக் கண்ட மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News