வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் 170 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற 170 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ஊக்கத்தொகை காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை, நந்தனம் மெட்ரோ இரயில் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற 170 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ஊக்கத்தொகை காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே திறன் பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பறிமாறிக்கொண்டனர்.
L&T நிறுவனத்தின் கப்பல் கட்டுமான தொழிற்சாலை சென்னை காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மற்றும் வணிக கப்பல்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த கப்பல் கட்டுமானத்துறையில் உள்ள திறன் பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறையை களையும் நோக்கில் ஐடிஐ தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நான்குமாத பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்த இன்று L&T நிறுவனம், இந்திய கப்பற்படை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியோருக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
300 Manufacturing technician பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் Delphi TVS நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
IITM -நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து Advanced Electronics Manufacturing, Basics of Electronics and Embedded system with sensors, Biosensors & Bioinstrumentation, CNC EDM Wire cutting practice, CNC programming & Machining, Digital Manufacturing practice, Embedded Technology with IoT, Multilayer PCB design & Fabrication, PLC and its industry application, Power Electronics and Drives, Certification Course on Intelligent Data Centre Management உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப பயிற்சிகளை 1,000 நபர்களுக்கு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Dixon Technologies - Padget Electronics Private Limited நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து SMT and FATP modules அடிப்படையில் பயிற்சியினை 300 நபர்களுக்கு அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
GTTI implementating German Dual Vocational and Education Training நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து CNC Turning, CNC Milling, CAD/CAM/Design software பயிற்சியினை 2,700 நபர்களுக்கு அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
HCL Tech Training நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து தூத்துக்குடி மற்றும் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த 2,500 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றத்தரவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., நான் முதல்வன் திட்ட முதன்மை செயல் அலுவலர் M.ஜெயபிரகாசம், I.S.D.S., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திட்ட இயக்குநர் (தொழில் நுட்பம்) S.சாந்தி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திட்ட இயக்குனர் K.V.ராஜ்குமார், திருநெல்வேலியைச் சேர்ந்த திறன் பயிற்சி பெற்ற மாணவர் அகிலாண்டம், உயர் அலுவலர்கள் மற்றும் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.