சென்னை: நாளைய புறநகர் ரயில் சேவைக்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரயில்கள் ரத்து என முன்பே கூறப்பட்டிருந்தது. அந்த நேரங்களில் மட்டும் பல்லாவரம் - எழும்பூர், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.