காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலூர் பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் மூலவர், சன்னதி மூலவர் கோபுரம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை மறுநாள் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக மூலவர் மற்றும் உற்சவருக்கான சிறப்பு யாகசாலையும், விநாயகர் அம்மன் வேல் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு என மொத்தம் 31 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நாளை மாலை முதல் துவங்க உள்ளது.