சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!!
Advertisement
டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. கலிஃபோர்னியா கடலில் டிராகன் விண்கலம் விழும் வகையில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. முன்னதாக அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு உதவியாக சுபான்ஷவின் பயணம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement