மாவட்ட அளவில் நடந்த தடகள போட்டிகளில் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்ற மாணவிகள்
செய்யாறு : செய்யாறு கல்வி மாவட்டம் செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் குண்டு எறிதலில் சார்மி முதலிடமும் மற்றும் 80மீ தடைதாண்டும் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றார். வட்டு எறிதலில் யசோதா முதலிடமும், அபிநயா இரண்டாம் இடமும் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவி கோமதி 200 மீ, 800 மீ முதலிடமும் 400மீ ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றார்.
மாணவி ஹேமலதா 400மீ ஓட்டத்தில் முதலிடம் 100மீ ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். மாணவி முத்துலட்சுமி 3000மீ, 1500மீ ஓட்டத்தில் முதலிடம் 800மீ ஓட்டத்தில் இரண்டாம் இடமும் மாணவி ரூபினி 3000மீ, 1500 மீ ஓட்டத்தில் இரண்டாம் இடம் மும்முறை தாண்டுதலில் இரண்டாம் இடம்பெற்றார்.
அனுஷ்கா நீளம் தாண்டுதல், மும்முறைதாண்டும் போட்டியில் முதலிடம் கனிமொழி என்கிற மாணவி 100மீ தடைதாண்டும் போட்டியில் இரண்டாம் இடம் ஜீவ தர்ஷினி என்கிற மாணவி கம்பு ஊண்றி தாண்டுதலில் முதலிடம் நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடம் ஜீவவர்ஷினி என்கிற மாணவி குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பெற்றார்.
காவ்யா என்கிற மாணவி வட்டு எறிதலில் இரண்டாம் இடம் பெற்றார். 400 மீ மற்றும் 1600 மீ தொடரோட்டத்தில் முதலிடம் பெற்றார்கள். 19 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவி வந்தனா 100மீ மற்றும் 200மீ போட்டியில் முதலிடம் சங்கீதா 400மீ ஓட்டத்தில் இரண்டாம் இடம் வினிதா100மீ தடை தாண்டும் மற்றும் மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்றார். சசிகலா 3000மீ மற்றும் 800மீ போட்டியில் இரண்டாம் இடமும் 1500மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்றார்.
தர்ஷினி என்கிற மாணவி வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முதலிடம் பெற்றார் 4X100 மீ தொடரோட்டத்தில் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் கோமதி, முத்துலட்சுமி மற்றும் ஜீவவர்ஷினி ஆகிய மூவரும் தனிநபர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
19 வயது பிரிவில் தர்ஷினி தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகள் அனைவரும் அடுத்த நடைபெற இருக்கும் மாவட்ட அளவில் போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.