தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேருந்து படியில் நின்று மாணவர்கள் ஆபத்தான பயணம்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை வடலூர் : வடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் குறிஞ்சிப்பாடி, வடலூர், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இப்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சென்று வந்து...

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வடலூர் : வடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் குறிஞ்சிப்பாடி, வடலூர், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இப்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சென்று வந்து படிக்கின்றனர்.

ஆனால் மாணவர்கள் பேருந்தின் உள்ளே செல்லாமல் காலை, மாலை இருவேளையும் பேருந்து உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு அறிவுரை கூறியும், மாணவர்கள் அவற்றை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆபத்தான பயணத்தை படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.

இப்படி ஆபத்தை உணராமல் படியில் தொங்கி பயணம் செல்வதால் தவறி விழுந்து விடுவார்களோ என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. நடத்துனர், ஓட்டுனர்களும் மாணவர்கள் நலன் கருதி பேருந்தை மெதுவாக பள்ளம் மேடு பார்த்து இயக்கி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.