சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்கர் தாலுகாவில் உள்ளது காளனஹூண்டி கிராமம். இந்த கிராமத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘ஒருநாளைக்கு ஒரு பஸ் இயக்கப்படுவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்’ என்றனர். மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் கேட்டு கொண்டனர். இதை தொடர்ந்து, போலீசாரின் உறுதியை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.