மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை : கல்லூரி விடுதியின் சுவரில் ’ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 2ம் ஆண்டு மாணவர்கள் மூவர், விடுதி சுவர்களில் தேச விரோதமான வாக்கியங்களை எழுதியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக மாணவர்கள் மூவரும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே முறையீடு செய்தனர்.
Advertisement
Advertisement