மாணவியிடம் அத்துமீறல் டியூஷன் ஆசிரியர் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கரமனையைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் தனது வீட்டில் டியூஷன் எடுத்து வருகிறார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் தன்னிடம் படித்து வந்த ஒரு 9 வயது மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் சிறுவர்கள் நல அமைப்பின் சார்பில் கவுன்சலிங் நடந்தது. அப்போதுதான் மாணவி டியூஷன் ஆசிரியர் அத்துமீறியது குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து டியூஷன் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.