திருவெறும்பூர்: திருச்சி அருகே துவாக்குடி அரசு பாலிடெக்னிக் வளாகத்திற்குள் அரசு மாதிரி பள்ளியில் வேலூர் மாவட்டம் கொடியத்தம் வசந்த நகர் எம்.குப்பத்தை சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17) பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு மாதிரி பள்ளியில் நேற்று திடீரென ஆய்வை மேற்கொண்டார். தற்கொலை செய்த மாணவர் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்ததோடு, பள்ளி மாணவர்களிடமும் கலந்துரையாடினார். மாணவர் பயின்று வந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.