தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் கொல்கத்தா சட்ட கல்லூரி பாதுகாவலர் கைது

Advertisement

கொல்கத்தா: கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் அக்கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் அரசு சட்ட கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதலாமாண்டு படிக்கும் 24 வயது மாணவியை அதே கல்லூரியில் முதுநிலை சட்ட படிப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் மற்றும் முன்னாள் மாணவர் உள்பட 3 பேரும் சேர்ந்து பாதுகாவலர் அறைக்கு இழுத்து சென்றுள்ளனர். அங்கு இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கஸ்பா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போதைய மாணவர்கள் ஜயிப் அகமது(19), பிரமித் முகர்ஜி(20) மற்றும் கல்லூரி முன்னாள் மாணவரும், சட்ட கல்லூரி திரிணாமுல் காங்கிரசின் பரிஷத் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் பொது செயலாளருமான மனோஜ் மிஸ்ரா(31) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் காவல்துறை கைது செய்தது.

அவர்கள் 3 பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அலிப்பூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. மாணவியின் புகாரின் அடிப்படையில் சட்ட கல்லூரி பாதுகாவலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில் பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

* சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு

கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News