மாணவி பலாத்காரம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஜி.கே.வாசன் பேட்டி
கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கோவையில் நேற்று மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை மாணவிகளுக்கு ஏற்பட கூடாது என்று உறுதிப்படுத்தும் வகையில் அரசு செயல்பட வேண்டும். இதுபோன்ற மிருகத்தனமான செயலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்’ என்றார்.
Advertisement
Advertisement