தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வைரல் பள்ளி தலைமை ஆசிரியர் கைது: கடலூர் சிறையில் அடைப்பு

விருத்தாசலம்: ஜட்டியுடன் பள்ளி தலைமை ஆசிரியரை இழுந்த சென்ற விவகாரத்தில் மாணவி அவரை காதலிப்பதாக கூறி ஆதரவாக கேள்வி எழுப்பியதால் அதிகாரிகள், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கடலூரை சேர்ந்தவர் எடில் பெர்ட் பெலிக்ஸ் (45). இவர் விருத்தாசலம் அருகே எருமனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்து வெளியே சென்ற மாணவி ஒருவருடன் முத்தம் கொடுப்பதுபோல் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
Advertisement

இதை பார்த்த மாணவியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் ஆத்திரமடைந்து நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்று, அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி ஜட்டியுடன் சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், தலைமை ஆசிரியரை மீட்டு பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்று விசாரணை நடத்தியபோது, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி பள்ளி வளாகத்தின் முன்பு விருத்தாசலம்- எருமனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட மாணவியிடம் (தற்போது 19 வயது) தாசில்தார், ‘நாங்கள் எல்லாம் வந்திருக்கோம்.... நாங்க கம்ப்ளைன்ட் வாங்கியாச்சு.... போக்சோவில் கேஸ் ரிஜிஸ்டர் பண்ணி கைது செய்ய வேண்டியதுதான்...’ என்றார். அதற்கு மாணவி, ‘யாரை நீங்க அரஸ்ட் செய்யப்போறீங்க...’ என்று கேட்டார். அதற்கு அதிகாரி, ‘அந்த பிரின்ஸ்பால...’ எனக் கூறவே, ‘நோ... அரஸ்ட் பண்ணக் கூடாது... என் பர்மிஷனோடு நடந்தது, எப்படி அவரை அரஸ்ட் பண்ணுவீங்க... எனக்கு பிடிச்சிருந்தது நான் அவரை லவ் பண்ணினேன் அவ்வளவுதான்...’ என்று தடாலடியாக கூறினார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பெண்களில் சிலர் மாணவியை திட்டி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸை விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸ் மீது போக்சோ வழக்கில் போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது செல்போன், பறிமுதல் செய்யப்பட்டு ஹைடெக் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைப்பது, பள்ளியில் புகார் பெட்டி வைத்து, அதன் சாவி மெட்ரிக் பள்ளியின் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் வைத்து வாரம் ஒருமுறை கண்காணிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

Related News