பள்ளி மாணவியை காதலிக்க வலியுறுத்தி தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை
08:24 AM Jun 06, 2025 IST
Share
Advertisement
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை தன்னை காதலிக்க வலியுறுத்தி அதிமுக பிரமுகர் சூர்யா என்பவர் தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்தி கத்தியை காட்டி மிரட்டிய சூர்யா, அவரது நண்பர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் அதிமுக பிரமுகர் சூர்யா மீது ராயப்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.