தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பி.இ., பி.டெக். பட்டப்படிப்பு துணை கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு

சென்னை : இளநிலை பொறியியல் (B.E / B.Tech) பட்டப்படிப்பு துணைக் கலந்தாய்வில் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 14.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:12-ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற்கல்வி (Vocational) பயின்று சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025-26 பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறிய மாணாக்கர்களும் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

துணைக் கலந்தாய்வில் மாணக்கர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (12.08.2025) வரை வழங்கப்பட்டிருந்தது. இந்த துணைக் கலந்தாய்வில் இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ள ஏதுவாக மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் 14.08.2025 வரை விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFC Centres) தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.