மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ரவுடி கைது
Advertisement
இதுகுறித்து சிறுமி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓட்டேரி சந்தியப்பன் 3வது தெருவை சேர்ந்த வசந்தகுமார் (21) என்பவர் போதையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. வசந்தகுமார் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து அயனாவரம் மகளிர் போலீசார் வசந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement