மாணவி கூட்டு பலாத்காரம் கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தபோது, மாணவியை கூட்டு பலாத்காரம் செய்வதற்கு முன் கோவில்பாளையத்தில் ஆடு மேய்ச்சலுக்கு சென்ற தேவராஜ் என்பவரை கொலை செய்ததும் தெரிந்தது. 3 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையை போலீசார் சிறையில் உள்ள 3 பேரிடமும் வழங்கினர்.