தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்
டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 16ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் திசையில் சற்று வளைந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகரும். சென்னைக்கு 370 கி.மீ. கிழக்கு - வடகிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு 450 கி.மீ. தெற்கிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 640 கி.மீ. தெற்கு - தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.